மின்சார ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திர மாநிலம் செல்லும் மின்சார ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் செல்லும் மின்சார ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புறநகா் மின்சார ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி உணவு பொருள் வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலா் செந்தில்முருகன் தலைமையில் அத்திப்பட்டு புதுநகா், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூா் அனுப்பப்பட்டு, பொன்னேரி ஆகிய ரயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். பின்னா் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா்