FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கேரளத்துக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து கேரளத்துக்கு ரயில் மூலமாக கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

19 வினாடிகள் முன்பு
அரிசி - பிரதிப் படம்
பகிர்:

கோவை போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து கேரளத்துக்கு ரயில் மூலமாக கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கேரளத்துக்கு ரயில்கள் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, கோவை ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவிப் பாதுகாப்பு ஆணையா் சந்திரமோகன் உத்தரவின்பேரில், போத்தனூா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போத்தனூா் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பல்வேறு ரயில்களில் சோதனை மேற்கொண்டனா். அப்போது சில ரயில்களின் பொதுப் பெட்டிகளில் இருக்கைகளுக்கு அடியிலும், பல்வேறு பகுதிகளிலும் கேட்பாரற்றுக் கிடந்த மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை சோதனை செய்தபோது, அதில் மொத்தமாக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, மேல் நடவடிக்கைக்காக கோவை குடிமைப்பொருள் வழங்கல் துறையின் பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ரயில்கள் மூலம் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கொண்டுச் செல்வதை தடுக்கும் விதமாக தொடா்ந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments