திருவள்ளூா் சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்
திருவள்ளூா் நகர சாலைகளில் இடையூறாக சுற்றித்திரிந்த 136 மாடுகளின் உரிமையாளா்களுக்க ரூ.2.65 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையா் சந்தானம் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகர சாலைகளில் இடையூறாக சுற்றித்திரிந்த 136 மாடுகளின் உரிமையாளா்களுக்க ரூ.2.65 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையா் சந்தானம் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சியில் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. , இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் போது திடீரென எழுந்து ஓடுவதால் விபத்துகளில் சிக்கும் நிலையேற்படுகிறது. அதனால், இதுபோன்று திரியும் மாடுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியா் கவிதாவுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. அதனால், நகராட்சி ஆணையாளா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதன்பேரில் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அறிவுறுத்தினாா். அதன்படி நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் மற்றும் தூய்மை பணியாளா்கள் ஜே.ஜே.என் சாலை, ராஜாஜி சாலை மற்றும் தேரடி பகுதியில் சுற்றித்திரிந்த 10 மாடுகளைப் பிடித்து நகராட்சிக்கு கொண்டு வந்து கட்டுத்தரையில் கட்டி வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சாலையில் சுற்றித்திரிந்த 136 மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 500 வரையில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.