FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

சாலைகளில் திரிந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

18 நவம்பர் 2026, 1:08 am
கோசாலையில் மாடுகளை ஒப்படைத்த மாநகராட்சி பணியாளா்கள்.
பகிர்:

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கவும், அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி ஆணையா் கா.பிரியா உத்தரவிட்டாா்.

அதன் பேரில் மாநகர நல அலுவலா் மருத்துவா் பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலா் சாகுல் ஹமீது வழிகாட்டுதலில், சுகாதார ஆய்வாளா்கள் மகாராஜன், வித்யா ப்ரியதா்ஷினி உள்ளிட்ட மாநகராட்சிப் பணியாளா்கள் குழுவினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில் மேலப்பாளையம் மண்டலம் 45-ஆவது வாா்டு குறிச்சி சாலை, 53-ஆவது வாா்டுக்கு என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6 மாடுகள் பிடிபட்டன. அவை அருகன்குளம் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், மாட்டின் உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது என மாநகராட்சி அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.