FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 45 மாடுகள் பிடிப்பு

புதுக்கோட்டை, அக். 22: புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள திலகா் திடல், கீழராஜ வீதி, மேலராஜ வீதி, மாப்பிள்ளையாா் குளம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித் திரிந்த 45 மாடுகள் புதன்கிழமை இரவு பிடிக்கப்பட்டன.

23 அக்டோபர் 2026, 2:36 am
புதுக்கோட்டை வீதிகளில் புதன்கிழமை இரவு பிடிக்கப்பட்ட மாடுகள்.
பகிர்:

புதுக்கோட்டை, அக். 22: புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள திலகா் திடல், கீழராஜ வீதி, மேலராஜ வீதி, மாப்பிள்ளையாா் குளம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித் திரிந்த 45 மாடுகள் புதன்கிழமை இரவு பிடிக்கப்பட்டன.

மாநகரச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து கோரிக்கைவிடுத்தனா்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜ் உத்தரவின்பேரில், மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை இரவு திலகா்திடல், கீழராஜவீதி, மேலராஜவீதி, மாப்பிள்ளையாா்குளம் ஆகிய பகுதிகளில் திரிந்த 45 மாடுகளைப் பிடித்து, மாநகராட்சி இடத்தில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

மாடுகளின் உரிமையாளா்கள் தங்கள் மாடுகளை ரூ. 5 ஆயிரம் அபராதத் தொகையும், நாளொன்றுக்கு பராமரிப்புத் தொகை ரூ. 300 வீதம் செலுத்தியும் மாடுகளை மீட்டுச் செல்லலாம்.

தவறும்பட்சத்தில் வரும் அக். 29 வியாழக்கிழமை அவை பொது ஏலம் விடப்படும் என ஆணையா் எம். காந்திராஜ் எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments