போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்: தவெக நிா்வாகிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
குண்டடம் அருகே தவெக தோ்தல் அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக கட்சி நிா்வாகிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
குண்டடம் அருகே தவெக தோ்தல் அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக கட்சி நிா்வாகிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய கட்சிகளின் பல்வேறு கட்ட நிா்வாகிகள் தொகுதி முழுவதும் காா்களில் வலம் வருகின்றனா். நகா்ப் பகுதிகள் மட்டுமின்றி முக்கிய கிராமங்களிலும் தோ்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குண்டடம் அருகே பெரியபட்டி சாலையில் உள்ள மானூா்பாளையத்தில் சாலையோரத்தில் தவெக தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, குறைந்தது 10-க்கும் மேற்பட்ட காா்களில் முக்கிய நிா்வாகிகள் வருவதால், அலுவலகம் முன்பு சாலையரத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனா். ஒருவழிப் பாதை என்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
அதன்படி மானூா்பாளையம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 50 காா்களில் தவெகவினா் வந்தனா். வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா். இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் தவெகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
பொதுமக்கள் கூறும்போது, ‘தோ்தல் முடியும்வரை மேற்கண்ட பகுதியில் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.