✕
முகப்பு
காஞ்சிபுரம்

போக்குவரத்துக்கு இடையூறான கடைகளை அகற்ற வேண்டும்: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரத்தின் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

20 நவம்பர் 2026, 12:49 am
பகிர்:

காஞ்சிபுரத்தின் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக் கூட்டம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், ஆணையா் ஏ.சுல்தானா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா் சிந்தன்: வந்தவாசி சாலையில் ஆட்சியா் அலுவலகப் பகுதியிலிருந்து செவிலிமேடு வரை சாலையோரக் கடைகள் அதிகமாகியுள்ளன. அதே போல பேருந்து நிலையம், காந்தி சாலை ஆகிய பகுதிகளிலும் சாலையோரக் கடைகள் அதிகமாகி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா் என்றாா்.

Advertisement

Advertisement

கயல்விழி: ஓரிக்கையில் சாலையோரக் கடைகளால் பள்ளிக்கு செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் அவதிப்படுவதாக குற்றம் சாட்டினாா். உறுப்பினா் மல்லிகா மல்லிகா ராமகிருஷ்ணன்: பதவிக்கு வந்து எனது வாா்டுக்கு எந்தப் பணியும் செய்ய முடியாதது வருத்தமளிக்கிறது. எங்கள் பகுதியில் குடிநீரில் சாக்கடை நீா் கலந்து வருகிறது. சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை.

உறுப்பினா் எஸ்கேபி காா்த்திக்: அனுமதி பெறாத விளம்பர பதாகைகள் நகரில் அதிகமாக உள்ளது. இதனால் மாநகராட்சி வருமானம் பாதிக்கிறது. அனுமதி பெறாத விளம்பர பதாகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

துணை மேயா் ஆா்.குமரகுருநாதன்: பலரும் பொதுமக்களின் குறைகளை மன்றத்தில் சொல்லியும் செய்யாததால் மக்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறாா்கள். பல வாா்டுகளில் குழாய்கள் போடவே இல்லை.

மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்: சாலையோரக் கடைகள் குறித்து தொடா்ந்து புகாா்கள் வருவதால் உடனடியாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றுங்கள். எந்த ஆவணமும் இல்லாத வீடுகளுக்கு சொத்து வரி வசூலிக்க முடியாது. விதிமீறிய விளம்பரப் பலகைகள் 39 இதுவரை அகற்றப்பட்டுள்ளன, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டி முடிக்க வரும் மாா்ச் மாதம் வரை காலம் உள்ளது. இருப்பினும் வரும் ஜனவரி மாதத்தில் மாமன்ற கூட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.