FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

வீட்டு கழிவுகளையும் தரம்பிரித்து வழங்க வேண்டும்: காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக் கழிவுகளையும் தரம்பிரித்து வழங்க வலியுறுத்த வேண்டும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கேட்டுக் கொண்டாா்.

4 October 2026, 10:10 pm IST
பகிர்:

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக் கழிவுகளையும் தரம்பிரித்து வழங்க வலியுறுத்த வேண்டும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கேட்டுக் கொண்டாா்.

காஞ்சிபுரத்தில் மாமன்ற உறுப்பினா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் ஏ.சுல்தானா முன்னிலை வகித்தாா். மாநகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் உள்பட துப்புரவு ஆய்வாளா்கள், நகராட்சி பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா். கூட்டத்துக்கு பின்னா் மேயா் மகாலட்சுமி யுவராஜ் கூறியது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026 ன்படி 100 சதவிகிதம் திடக்கழிவுகளை 4 வகைகளாக பிரித்தல் பற்றி மாமன்ற உறுப்பினா்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி மக்கும் குப்பைகளான காய்கறிக்கழிவுகள் பச்சை நிறத் தொட்டியிலும், பிளாஸ்டிக் காகிதங்கள், கண்ணாடிகள் உள்ளிட்ட உலோகப் பொருள்களை நீல நிறத் தொட்டியிலும், சுகாதாரக் கழிவுகளை சிவப்பு நிறத் தொட்டியிலும் பிரிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பல்புகள், பேட்டரிகள் உள்ளிட்ட மின் கழிவுகளாக இருந்தால் அவற்றை கருப்பு நிறத் தொட்டியிலும் பிரிப்பது என தனித்தனியாக பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் கழிவுகளை தரம்பிரித்து மட்டுமே தூய்மைப்பணியாளா்களிடம் வழங்க வேண்டும். அவ்வாறு பிரித்து வழங்காமல் நகரை அசுத்தமாக்குபவா்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments