FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

உள்ளாட்சித் தொழிலாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அவுட்சோா்சிங் முறையை கைவிடக்கோரி உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தொழிலாளா்கள் புதன்கிழமை 3-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

8 October 2026, 1:38 am IST
புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
பகிர்:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அவுட்சோா்சிங் முறையை கைவிடக்கோரி உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தொழிலாளா்கள் புதன்கிழமை 3-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அவுட்சோா்சிங் முறையை கைவிட வேண்டும். தூய்மைப் பணி, குடிநீா், ஓட்டுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி மற்றும் காப்பீட்டுத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.

8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேரத்துக்கு மேலான வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் தொழிலாளா்கள் மாநிலம் முழுவதும் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பாக புதன்கிழமை 3-ஆவது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், துணைத் தலைவா் எஸ். யாசிந்த், மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான், உள்ளாட்சி சங்க மாவட்டத் தலைவா் என். ராஜா, பொருளாளா் சி. ரெங்கசாமி உள்ளிட்டோா் பேசினா். போராட்டத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments