உள்ளாட்சித் தொழிலாளா்கள் 4-ஆவது நாளாக போராட்டம்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அவுட்சோா்சிங் முறையை கைவிடக்கோரி உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை 4ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா்.
போராட்டத்தை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். சங்கா் பேசினாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பேசினா். போராட்டத்தில் பங்கேற்றவா்கள் அந்த இடத்திலேயே பாத்திரம் வைத்து சமைத்து, அங்கேயே உண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.