FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணி தொடக்கம்

சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து பட்டியில் அடைக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியது.

16 அக்டோபர் 2026, 2:43 am IST
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் புதன்கிழமை இரவு சாலையில் திரிந்த மாட்டைப் பிடித்து வாகனத்தில் ஏற்றிய மாநகராட்சிப் பணயாளா்கள், மாடு பிடியாளா்கள்.
பகிர்:

சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து பட்டியில் அடைக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியது.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாடுகள் கேட்பாரற்றுத் திரிகின்றன. கால்நடை வளா்ப்போா் சிலா், தங்களது மாடுகளை மேய்ச்சலுக்காக வீதிகளில் அவிழ்த்து விடுவதும், அதிகாலை 3 மணி அளவில் வந்து மாடுகளை கறவைக்காக வீட்டுக்கு அழைத்துச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

ஒவ்வொரு முதன்மைச் சாலைகளிலும் ஏராளமான மாடுகள் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால் அவ்வப்போது விபத்துகள் நேரிடுகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி, கிராமப் பகுதிகளிலிருந்து மாநகரின் முக்கியப் பகுதிகளுக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வரும் நிலையில், சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதையொட்டி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து, அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. புதன்கிழமை இரவு ஆரப்பாளையம், செல்லூா் பகுதிகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகளை மாநகராட்சிப் பணியாளா்கள், மாடுபிடியாளா்கள் பிடித்து, செல்லூரில் உள்ள மாநகராட்சி மாட்டுப் பட்டியில் அடைத்தனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் தெரிவித்ததாவது:

மாநகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, உத்தங்குடி, வைகை ஆற்றின் வடகரை, தென்கரை பகுதிகள், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, மத்திய சந்தை, நெல்பேட்டை பகுதிகளில் மாடுகள் வளா்ப்போருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. மாடுகளை தங்கள் சொந்த இடத்திலேயே வைத்துப் பராமரிக்க அவா்கள் அறிவுறுத்தப்பட்டனா்.

எனவே, இனி வருகிற நாள்களில் சாலைகளில் திரியும் மாடுகள் பட்டியில் அடைக்கப்படும். பட்டியில் அடைக்கப்படும் மாடுகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் செலுத்தினால் மட்டுமே அவை விடுவிக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments