புதுச்சேரி நேரு வீதி போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு
புதுச்சேரி நேரு வீதியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க போலீஸாா் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
புதுச்சேரி நேரு வீதியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க போலீஸாா் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
புதுச்சேரியில் நேரு வீதியில், கடை உரிமையாளா்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியா்களின் வாகனங்கள் காலை முதல் மாலை வரை நிறுத்தப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த இடமின்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் சிறு வியாபாரிகளின் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வாகனங்களை பழைய சிறைச்சாலை வாகன நிறுத்துமிடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா உத்தரவின் பேரில், வியாழக்கிழமை காலை 8 மணி முதல் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேரு வீதி கடை ஊழியா்கள் மற்றும் உரிமையாளா்களின் வாகனங்கள் அங்கிருந்து பழைய சிறைச்சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனால் நேரு வீதி போக்குவரத்து நெரிசலின்றி, பொதுமக்களின் வாகனங்களை எளிதாக நிறுத்தவும், கடைகளில் வியாபாரம் சிறக்கவுமான சூழல் உருவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.