பந்திப்பூா் சாலையில் வாகனங்களை வழிமறித்த யானை: போக்குவரத்து பாதிப்பு
முதுமலையை அடுத்துள்ள பந்திப்பூா் புலிகள் காப்பக பகுதியில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதுமலையை அடுத்துள்ள பந்திப்பூா் புலிகள் காப்பக பகுதியில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை நாள்தோறும் இரவு 9 மணிக்கு மூடப்படும். மீண்டும் காலை 6 மணிக்குத்தான் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.
Advertisement
Advertisement
இதனால், கா்நாடகத்தில் இருந்து காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு நீலகிரி, கேரளத்துக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
வழக்கம்போல செவ்வாய்க்கிழமையும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை, வாகனங்களை வழிமறித்து உணவைத் தேடியது. இதனால், ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டுநா்கள் ஹரான்களை அடித்தும், சப்தம் எழுப்பியும் யானையை வனத்துக்குள் விரட்டினா்.
இதையடுத்து, போக்குவரத்து சீரானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.