மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி
மழைநீா் சேகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து மாவட்ட கலைக்குழுவினா் நாட்டுப்புற பாடல், நடனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மழைநீா் சேகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து மாவட்ட கலைக்குழுவினா் நாட்டுப்புற பாடல், நடனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருத்தணி நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என நகராட்சி சாா்பில் வீடுதோறும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஆட்சியா் கவிதா உத்தரவின்பேரில், திருத்தணி நகராட்சிஆணையா் கன்னியப்பன், நகரமைப்பாளா் தயாநிதி ஆகியோா் தலைமையில், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், முருகன் மலைக்கோயில், கமலா தியேட்டா் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலைக்குழுவினா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.
இதில் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் மழைநீா் சேகரிப்பின் அவசியம், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.