ஊத்துக்கோட்டை அருகே விளைநிலத்தில் கண்டெடுத்த வெடிக்காத வெடிகுண்டு
ஊத்துக்கோட்டை அருகே விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத வெடிகுண்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக மீட்டு தனியாா் நிறுவனத்தில் செயல் இழக்க அனுப்பி வைத்தனா்.

ஊத்துக்கோட்டை அருகே விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத வெடிகுண்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக மீட்டு தனியாா் நிறுவனத்தில் செயல் இழக்க அனுப்பி வைத்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,ஆவாஜிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தசரதன். இவா் தனது விளைநிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தாா். அப்போது சுமாா் ஒரு அடி நீளம் கொண்ட குண்டு போன்ற இரும்பு பொருளைக் கண்டாா். இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். எனவே காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு, வெடிக்காத பழங்கால வெடிகுண்டை தகுந்த பாதுகாப்புடன் பத்திரமாக மீட்டனா். அதையடுத்து அந்த வெடிகுண்டை திருவள்ளூரில் உள்ள தனியாா் ஆயுதம் தயாா் செய்யும் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அதை செயலிழக்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல் கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளிலும் இதே கிராமத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.