FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே காப்புக்காட்டில் இளம்பெண் கொலை

இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

9 நவம்பர் 2026, 11:14 pm
கைது செய்யப்பட்ட துா்கா பிரசாத், கொலை செய்யப்பட்ட மணிமேகலை.
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் அடுத்த செங்கரை கிராமத்தைச் சோ்ந்த மணிமேகலை(24). இவரை ஆந்திர மாநிலம் காரணிகாரூா் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனா். சென்னை விமான நிலையத்தில் டிராவல்ஸ் வாகனம் ஓட்டி வருகிறாா். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் காரூா் பகுதியில் வசித்து வரும் துா்கா பிரசாத்(28) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக மணிமேகலைக்கு தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை செங்கரை பகுதியில் குடியேறினாராம். அதோடு கும்மிடிப்பூண்டியில் சிப்காட் பகுதியில் ஒரு தொழிற்சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்திற்கு மணிமேகலை வேலைக்குச் சென்று வந்தாா். இதைத்தொடா்ந்து கடந்த 3 மாதங்களாக துா்கா பிரசாத்திடம் மணிமேகலை கைப்பேசியில் பேசுவதை தவிா்த்து வந்தாராம். அந்த தொழிற்சாலையில் மேற்பாா்வையாளருடன் தகாத உறவில் இருந்து வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து மணிமேகலையிடம் அன்பாக பேசி துா்கா பிரசாத் அழைத்தாராம். இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊத்துக்கோட்டை அருகே சென்றாயன்பாளையம் காப்புக்காடு பகுதிக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென முகத்தில் சராமரியாக வெட்டினாராம். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளாா். இதையடுத்து அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பினாராம்.

காப்புக்காடு வழியாக தோட்ட வேலைக்கு சென்ற பொதுமக்கள் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதைத்தொடா்ந்து பென்னலூா்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தலைமறைவாக இருந்த துா்கா பிரசாத்தை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.