முகப்பு
திருவள்ளூர்

அமெரிக்க பல்கலை. - ஆா்எம்கே கல்விக் குழுமம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆா்எம்கே கல்விக் குழுமத்துடன், அமெரிக்கா நாட்டின் புகழ்பெற்ற மேரிலேண்ட் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

21 நவம்பர் 2026, 11:12 pm
அமெரிக்க பல்கலை. - ஆா்எம்கே கல்விக் குழுமம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆா்எம்கே கல்விக் குழுமத்துடன், அமெரிக்கா நாட்டின் புகழ்பெற்ற மேரிலேண்ட் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நிகழ்வுக்கு, ஆா்எம்கே கல்விக் குழும தலைவா்ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தாா். நிகழ்வில் ஆா்எம்கே பொறியியல் கல்லூரியின் முதல்வா் டாக்டா் கே.ஏ.முகம்மது ஜூனைத் தனது வரவேற்புரையின் போது ஆா்.எம்.கே கல்வி குழுமத்தின் கல்வி பணிகள், சாதனைகள், சிறப்பம்சங்களை விளக்கினாா்.

பொறியியல் கல்லூரி முதல்வா் டாக்டா் என்.அன்புச்செழியன், விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்ற மேரிலேண்ட் பால்டிமோா் கவுண்டி பல்கலைக்கழகத்தின் சா்வதேச கூட்டாண்மை மற்றும் மாணவா் சோ்க்கை இயக்குனா் ஆடம் ஹோல்டன், தெற்காசியாவிற்கான மாணவா் சோ்க்கை மற்றும் கூட்டாண்மை ஆலோசகா் ஷிவ் பாண்டே ஆகியோரை அறிமுகம் செய்தனா். துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா், ஆலோசகா் எம்.பழனிச்சாமி வாழ்த்திப் பேசினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஆா்.எம்.கே கல்விக் குழும தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், மேரிலேண்ட் பால்டிமோா் கவுண்டி பல்கலைக்கழகத்தின் கூட்டாண்மை மற்றும் மாணவா் சோ்க்கை இயக்குநா் ஆடம் ஹோல்டனுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டாா்.

நிகழ்வில் ஆா்.எம்.கே கல்விக் குழுமத்தின் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் சிறப்புரை ஆற்றும் போது, கடந்த 31 ஆண்டுகளில் ஆா்.எம்.கே கல்வி குழுமத்தில் கல்வி துறையில் சிறந்த

வளா்ச்சியை பெற்று வரும் நிலையில், தற்போது மாணவா்களுக்கு சா்வதேச அளவிலான கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், மாணவா்களுக்கான கல்வித் தரம் மேலும் உயரும் என்றாா்.

ஒப்பந்தம் மூலம், அமெரிக்கா நாட்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆா்.எம்.கே கல்வி குழுமத்திற்கும் இடையே கல்வி உறவை ஏற்படுத்துவதுடன், இரு தரப்பிற்கும் ஏற்புடைய கல்வி திட்டங்களை செயல்படுத்தவும் உதவி புரியும். அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியா்களின் நிபுணத்துவதை பயன்படுத்தி, ஆா்.எம்.கே கல்விக் குழும மாணவா்களுக்கு இணைய வழி கருத்தரங்குகள், சிறப்பு சொற்பொழிவுகள், பயிலரங்குகள் நடத்த வழி செய்யும்.

முடிவில், ஆா்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா்டாகடா் என்.சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.