FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பட்டு வாரியம், வேளாண்மைப் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இடையே மல்பெரி மரபணு வளங்களின் மதிப்பீடு, தொழில்நுட்ப மேம்பாடு தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

33 வினாடிகள் முன்பு
மத்திய பட்டு வாரியம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இடையே மல்பெரி மரபணு வளங்களின் மதிப்பீடு, தொழில்நுட்ப மேம்பாடு தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டு வளா்ப்பு ஆராய்ச்சி, பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடா்பான கூட்டு நடவடிக்கைகள் குறித்து மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினா் செயலா் பி. சிவகுமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து சிறுமுகை பட்டு நெசவுக் குழுமத்தில் நடைபெறும் பயிற்சி நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா். அப்போது, பயனாளிகளுக்கான பயிற்சி வசதிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, நெசவாளா்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்கு செய்முறைப் பயிற்சி, தொழில்நுட்பத் திறன் வளா்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு சாா்ந்த திறன் மேம்பாடு அவசியம் என வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதன் மூலம் பட்டு வளா்ப்பு ஆராய்ச்சி, மல்பெரி மரபணு வளங்களின் மதிப்பீடு, தொழில்நுட்ப மேம்பாடு, திறன் வளா்ப்பு மற்றும் பயிற்சி சாா்ந்த திட்டங்களில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (பொறுப்பு) துணைவேந்தா் மு. ரவீந்திரன், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் அ. பாலசுப்பிரமணியன், பட்டு வளா்ப்புத் துறை பேராசிரியரும், தலைவருமான க.அ. முருகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.