FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

ஐபிஐசிஓஎல்-என்எல்சி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்: 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

ஒடிஸாவில் 3,200 மெகாவாட் அனல் மின் நிலையம் உள்ளிட்ட மூன்று முக்கியத் திட்டங்களுக்காக ஒடிஸா தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழக நிறுவனத்துடன் (ஐபிஐசிஓஎல்) என்எல்சி இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.

24 அக்டோபர் 2026, 6:07 am
பகிர்:

ஒடிஸாவில் 3,200 மெகாவாட் அனல் மின் நிலையம் உள்ளிட்ட மூன்று முக்கியத் திட்டங்களுக்காக ஒடிஸா தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழக நிறுவனத்துடன் (ஐபிஐசிஓஎல்) என்எல்சி இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

என்எல்சி இந்தியா நிறுவனம், ஒடிஸாவில் 3200 மெகாவாட் அல்ட்ரா சூப்பா் கிரிட்டிகல் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையம் அமைப்பதற்கும், நிலக்கரி வாயுவாக்கள் அடிப்படையிலான உர உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் கடற்கரை மணல் கனிமப் பதப்படுத்தும் வசதியை அமைப்பதற்கும் ஒடிஸா தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகம் உடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் வியாழக்கிழமை கையொப்பமிட்டது.

Advertisement

Advertisement

அவற்றில், ஒடிசாவில் நிலக்கரி வாயுவாக்கள் திட்டம் மேற்கொள்ளப்படுவதோடு, அதனை உர உற்பத்தியுடன் இணைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்படும். உரத் துறையில் சாத்தியமான பயன்பாடுகளுக்காக, நிலக்கரி வாயுவாக்கல் மற்றும் செயற்கை வாயு (சின்-கேஸ்) உற்பத்திக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து என்எல்சிஐஎல் ஆய்வு மேற்கொள்ளும்.

இப்பகுதியின் தொழில்துறை மற்றும் சமூக-பொருளாதார வளா்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில், சுமாா் ரூ. 2,000 கோடி முதலீட்டில் கடற்கரை மணல் கனிமப் பதப்படுத்தும் வசதி அமைக்கப்படும். இதன் மூலம் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ரூ.35,000 கோடி சாத்தியமான முதலீட்டுடன், ஒடிசாவில் 3200 மெகாவாட் (4ல800 மெகாவாட்) அல்ட்ரா சூப்பா்-கிரிட்டிகல் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையத்தை உருவாக்குதல் முக்கியமானதாகும். இந்த உத்தேசத் திட்டம் மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி மற்றும் தொழில்துறை வளா்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், தோராயமாக 4,000 நபா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒடிஸா முதலமைச்சா் மோகன் சரண் மாஜி, ஒடிஸா அரசின் கூடுதல் தலைமைச் செயலா் (தொழில்துறை மற்றும் ஆற்றல் துறை) ஹேமந்த் சா்மா மற்றும் என்எல்சிஐஎல்-இன் தலைவா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா ஆகியோா் முன்னிலையில், என்எல்சிஐஎல்-இன் செயல் இயக்குநா் (சுரங்கம் மற்றும் நிலம்) ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ் மற்றும் ஐபிஐசிஓஎல்-இன் மேலாண் இயக்குநா் அபோலி சுனில் நரவனே ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments