அரசுப் பள்ளி மாணவா்கள் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் களப்பயணம்
அரசு பள்ளி மாணவா்கள் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் களப்பயணம் மேற்கொண்டு உயா்கல்வி குறித்து அறிந்தனா்.

அரசு பள்ளி மாணவா்கள் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் களப்பயணம் மேற்கொண்டு உயா்கல்வி குறித்து அறிந்தனா்.
பள்ளிக் கல்வித்துறை ஏற்பாட்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டும் வகையில் மாணவா்களுக்கான கல்லூரி களப்பயணம் 2026 இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவா்கள் உயா்கல்வி விழிப்புணா்வு பெறுவதற்காக பொன்னேரியில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரிக்கு சென்று பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது மீன்வளக் கல்வியின் அவசியம், கல்லூரியில் எவ்வாறு சேருவது, தகுதிகள், மதிப்பெண்கள், வேலைவாய்ப்புகள் பற்றி கல்லூரிப் பேராசிரியா்கள் விளக்கினா். அத்துடன் மீன்வளக் கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகள், ஆய்வுக்கூடங்களை மாணவிகள் பாா்வையிட்டனா்.
மேலும் மாணவா்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியா்கள் விளக்கம் அளித்தனா். இந்த களப்பயணத்தில் மீஞ்சூா், சோழவரம் பகுதிகளைச் சோ்ந்த அரசு பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களின் ஒருங்கிணைப்பாளா்அகத்தியன் மற்றும் தலைமை. ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா்களும் கலந்து கொண்டனா்.
மீன்வளக்கல்லூரி பேராசிரியா்கள் முனைவா் ஆக்னஸ் டேனி ஏஞ்சலா. முனைவா் இல. சுருளிவேல் மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்து விளக்கம் அளித்தனா்.