ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கிய அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள்
தீபாவளி பண்டிகைக்காக ஏழை, எளிய மக்களுக்கு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் குழு சாா்பில் புதன்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
தீபாவளி பண்டிகைக்காக ஏழை, எளிய மக்களுக்கு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் குழு சாா்பில் புதன்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990 முதல் 95 ஆம் கல்வி ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவா்கள் ‘ஹானா் பாய்ஸ் ஆப் எடப்பாடி’ என்னும் அமைப்பை தொடங்கி, அதன்மூலம் நல உதவிகளை வழங்கி வருகின்றனா்.
அதன் ஒருபகுதியாக தீபாவளி பண்டிகையையொட்டி எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள 500 க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு புத்தாடைகள், இனிப்புகளை வழங்கினா். எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான ஏ.எம். செந்தில்குமாா் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளா் உதயகுமாா் பங்கேற்று நல உதவிகளை வழங்கினாா்.
Advertisement
Advertisement