புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை: வீரராகவா் கோயிலில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம்
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்றது. இதனால் ஒவ்வொரு அமாவாசை தினத்தில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக பக்தா்கள் குவிவது வழக்கம். அதேபோல், புரட்டாசி மாதம் 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து கோயில் முன்புறம் பக்தா்கள் குவிந்தனா். இதையொட்டி, அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகமும், மூலவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதற்காக பலரும் விரதம் இருந்து, அரிசி மாவு, வெல்லம் மற்றும் நெய் கொண்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனா். அதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் மூலவரை தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.