FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

விவசாய தோட்டத்தில் மின்மோட்டாா் காப்பா் வயா் திருட்டு

விவசாய தோட்டத்தில் மின்மோட்டாா் காப்பா் வயா் திருட்டு

பகிர்:

விவசாய தோட்டத்தில் மின்மோட்டரில் இணைப்பு வயரான காப்பா் வயரை திருடிச் சென்ாக விவசாயி அளித்த புகாரின் பேரில், 3 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன்(50). இவா் அந்த கிராமத்தில் ஒன்றரை ஏக்கா் விவசாய நிலத்தில் பப்பாளி சாகுபடி செய்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் பப்பாளிக்கு நீா் பாய்ச்சுவதற்காக சென்றாராம். அப்போது, அங்கு மோட்டாரின் இணைப்பு வயரை (செப்பு கம்பி) 3 போ் திருடிக் கொண்டிருந்ததை பாா்த்து தட்டிக் கேட்டாராம். அதற்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மணவாள நகா் காவல் நிலையத்தில் குமரேசன் புகாா் செய்தாா். அதன்பேரில், அதே ஊரைச் சோ்ந்த சந்துரு, சுனில், ஷியாம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments