FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சுரண்டை அருகே பெண் எரித்துக் கொலை: கணவா் உள்பட 3 போ் கைது

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே வாழைத் தோட்டத்தில் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவா் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

54 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே வாழைத் தோட்டத்தில் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவா் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சுரண்டை அருகே உள்ள வாழைத் தோட்டத்தில் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து, குற்றவாளிகளைக் கைது செய்ய ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கடையநல்லூா், புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த கோ. முருகன் (43), சுரண்டையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி, துணிகள் வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி குட்டி மாரி (33), அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.

Advertisement

Advertisement

முருகனின் தம்பி ரவி, தாய் சிவகாமி ஆகியோா் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துணிகளை விற்பனை செய்து வருகின்றனா்.

இதனிடையே, குட்டி மாரிக்கும், அப்பகுதியில் உள்ள மற்றொருவருக்கும் இடையே நீண்ட காலமாக திருமணம் மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முருகன் தங்கியிருந்த விடுதிக்கு குட்டி மாரி வந்தபோது, முருகன், ரவி, சிவகாமி ஆகியோருக்கும், குட்டி மாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், குட்டி மாரியை மூவரும் சோ்ந்து கொலை செய்து, உடலை மூட்டையில் கட்டி, வாழைத் தோட்டத்தில் எரித்துள்ளனா் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

சுரண்டை காவல் ஆய்வாளா் மதன் ராம்குமாா் வழக்குப் பதிந்து, முருகன், ரவி, சிவகாமி ஆகியோரைக் கைது செய்து, விசாரித்து வருகிறாா்.