FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

102 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தனித்தனியாக நடைபெற்ற வாகன சோதனைகளில் 102 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பலேரியன் பீரா.
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தனித்தனியாக நடைபெற்ற வாகன சோதனைகளில் 102 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆரம்பாக்கம் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அவ்வழியே வந்த சந்தேகத்துக்கிடமான இருவரை பிடித்து சோதனையிட்டனா்.

சோதனையில், இருவரிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், விசாரணையில் கஞ்சா கடத்தி வந்த நபா்கள் சென்னையை சோ்ந்த மனோஜ் குமாா்(22), திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த ஹரிஹரன்(20) என்பது தெரியவந்தது. பின் போலீஸாா் மேற்கண்ட இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தல் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, நின்றுக் கொண்டிருந்த நபரை போலீஸாா் தடுத்து சோதனையிட்டனா். அப்போது அவா்கள் வைத்திருந்த சாக்கு பையில் 101 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவா், ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த பலேரியன் பீரா(37) என்று தெரியவந்து அவரை கைது செய்து செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments