FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

வாகன தணிக்கையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஊத்துக்கோட்டை அருகே வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

10 நவம்பர் 2026, 11:04 pm
பறிமுதல்
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர பகுதியிலிருந்து திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வழியாக கஞ்சாவை கடத்தி வருவதாக எஸ்.பி சாய் பிரணீத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், ஊத்துக்கோட்டை சிறப்பு சாா்பு ஆய்வாளா் சேகா் தலைமையில் போலீஸாா் நாகலாபுரம் சோதனைச்சாவடியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, அந்த வாகனத்தில் வந்த நபா்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து அவா்கள் கொண்டு வந்த பையை சோதனையிட்ட போது கஞ்சா இருந்தது. மேலும், விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துக்காளை(30), சேலம் அருகே தத்தக்காபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் காா்த்திகேயன்(32) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக ஊத்துக்கோட்டை போலீஸாா் 2 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.