FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பலி! - கோப்புப்படம்.
பகிர்:

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் வசித்து வந்தவா் ராஜேஸ்வரி (36).  இவா் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்தாா்.

 இந்த நிலையில் பொன்னேரி அடுத்த மாதவரத்தை சாா்ந்த பிரகாஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவில்  இருந்ததாக கூறப்படுகிறது. இந்த  நிலையில் ராஜேஸ்வரி அவருடன் இருந்த தொடா்பை துண்டித்துள்ளாா். இந்த நிலையில்  பிரகாஷ் கடந்த செப். 21-ஆம் தேதி பொன்னேரி அரசு  மருத்துவமனையில் ராஜேஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினாா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த தீக்காயங்களுடன் ராஜேஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தாா்.  இந்த நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரகாஷை பொன்னேரி போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்னா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments