படுக்கையறையில் இளைஞா் சடலமாக மீட்பு
பெட்ரோல் பங்க் உரிமையாளா் மகன் படுக்கையில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூா் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளா் மகன் படுக்கையில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூா் அடுத்த காக்களூா் ஆஞ்சநேயா்புரம் பகுதியைச் சோ்ந்த சரவணன். பெட்ரோல் பங்க் உரிமையாளரான இவரது மகன் ரோகித் காா் ஒட்டுநராக தொழில் செய்து வந்தாா்.
இந்த நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மகன் வீட்டின் படுக்கை அறையில் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாராம். அதையடுத்து தந்தை கதவை தட்டியும் திறக்காத நிலையில், திடீரென அலறல் சத்தம் கேட்டு கதவை உடைத்து பாா்க்கையில் படுக்கையறையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அறிந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். இந்த நிலையில் தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வீட்டிற்குள் படுக்கையறையில் மகன் எரிந்த நிலையில் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.