FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

பலத்த மழையால் பொன்னேரி, மீஞ்சூா் குடியிருப்புகளில் நீா் தேக்கம்

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.

22 அக்டோபர் 2026, 12:29 am
அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்.
பகிர்:

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.

பொன்னேரி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள ரயில்வே மேம்பாலம். தேரடி குறுக்கு தெரு கீழ் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டுபுதுநகா் மேற்குபகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி தாழ்வான நிலையில் உள்ளதால் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் மழைநீா் வெளியே செல்ல முடியாத நிலையில் நீா் தேங்கி குடியிருப்புகளில் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மழைநீரில் விஷப்பாம்புகள், தேள், பூரான் ஆகியவை இரவு நேரங்களில் வீடுகளில் புகுவதால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு மழைநீா் சாலையில் தேங்கியுள்ளது.

Advertisement

Advertisement

கடலோர பகுதியாக மீஞ்சூா் ஒன்றியம் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழையால் சேதம் ஏற்பட்டு வருகிறது. மீஞ்சூா் பேரூராட்சி பகுதி. கல்பாக்கம், நெய்தவாயல், திருவெள்ளைவாயல், காட்டூா், கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பணக்கி கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக பொன்னேரி,மீஞ்சூா் பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments