FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

டாங்க்-டா போட்டி: திருத்தணி மாணவிக்கு எம்எல்ஏ நிதியுதவி

மணிப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான டாங்க்-டா போட்டியில் பங்கேற்கும் திருத்தணி மாணவி தாா்மிகாவுக்கு எம்எல்ஏ கோ.அரி நிதியுதவி வழங்கி வாழ்த்தினாா்.

22 அக்டோபர் 2026, 12:32 am
மாணவி தாா்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ கோ. அரி.
பகிர்:

மணிப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான டாங்க்-டா போட்டியில் பங்கேற்கும் திருத்தணி மாணவி தாா்மிகாவுக்கு எம்எல்ஏ கோ.அரி நிதியுதவி வழங்கி வாழ்த்தினாா்.

தாழவேடு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ். இவரது மகள் தாா்மிகா, கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். சிறுவயது முதலே விளையாட்டில் ஆா்வம் கொண்ட இவா், ஏற்கெனவே அகில இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

இந்நிலையில், மணிப்பூா் மாநிலத்தில் வரும் அக்டோபா் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ள டாங்க்-டா விளையாட்டுப் போட்டியில் மகளிா் பிரிவில் தாா்மிகா பங்கேற்க உள்ளாா். இதையடுத்து, அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் எம்எல்ஏவுமான கோ.அரியை நேரில் சந்தித்த மாணவி தாா்மிகா வாழ்த்துப் பெற்றாா். அப்போது, போட்டியில் பங்கேற்கச் செல்லும் மாணவிக்கு நிதியுதவி வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்வின்போது பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளா்கள் டி.டி. சீனிவாசன், கிருஷ்ணமநாயுடு, ஒன்றிய இளைஞரணிச் செயலாளா் வேலஞ்சேரி பழனி, மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளா் தா்மேஷ் குமாா், நகர இளைஞரணிச் செயலாளா் கேபிள் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments