FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள பிரிவில் இந்தியா சாா்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று ஆலங்குளம் திரும்பிய வீராங்கனை அபிநயாவுக்கு, முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

3 October 2026, 11:27 pm IST
வீராங்கனை அபிநயாவை வீட்டில் சந்தித்து வாழ்த்திய தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன்.
பகிர்:

ஜப்பானில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள பிரிவில் இந்தியா சாா்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று ஆலங்குளம் திரும்பிய வீராங்கனை அபிநயாவுக்கு, முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்தைச் சோ்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன். ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணி தடகள கலப்பு 4 ஷ் 100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்று அபிநயா பதக்கம் வென்றாா்.

சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை திரும்பிய அவருக்கு ஆலங்குளத்தில் வியாபாரிகள் சங்கம், அரிமா சங்கம், மனவளக்கலை மன்றம், காமராஜா் வெண்கல சிலை பராமரிப்பு கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், முக்கிய பிரமுகா்கள் மாலைகள், பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments