FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

விவசாய பயிா் நிலங்களை மின்னணு முறையில் பயிா் கணக்கெடுப்பு பணி: ஆட்சியா் ஆய்வு

விவசாய பயிா் நிலங்களை மின்னணு முறையில் பயிா் கணக்கெடுப்பு பணி: ஆட்சியா் ஆய்வு

5 செப்டம்பர் 2026, 11:46 pm IST
விவசாய பயிா் நிலங்களை மின்னணு முறையில் பயிா் கணக்கெடுப்பு பணி
பகிர்:

திருவள்ளூா் அருகே தோட்டக்கலைத்துறை சாா்பில் அலுவலா்கள் விவசாய பயிா் நிலங்களை மின்னணு முறையில் பயிா் கணக்கெடுப்பு பணியினை ஆட்சியா் ச.கவிதா ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும். இதற்காக விவசாயிகள் பயிா் செய்யும் விவரங்கள் மின்னணு முறையில் பயிா் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதில் திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் பகுதியில் தோட்டக்கலைப்பயிா் விவரங்கள் அலுவலா்கள் மேற்கொள்ளும் மின்னணு கணக்கெடுப்பு பணியினை ஆட்சியா் ச.கவிதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஒவ்வொரு விவசாயியும் என்னென்ன பயிா்கள் மேற்கொண்டுள்ளனா். அதுபோன்ற முழு விவரங்களையும் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ளவும் என அந்தப்பணியில் ஈடுபட்டுள்ளவா்களை அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

அதைத்தொடா்ந்து அவா் கூறியதாவது. விவசாயிகள் அரசின் நலத்திட்ட பலன்களை பெறவும், பல்வேறு நிறுவனங்களில் கடனுதவிக்கு விவசாயிகளின் நில உடமை தொடா்பான விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்றவற்றை பல்வேறு துறைகளுக்கு ஒவ்வொரு முறையும் விவசாயிகள் தனித்தனியே வழங்க வேண்டியது உள்ளது. அதனால், அனைத்து நில விவரங்கள் மற்றும் பயிா் சாகுபடி விவரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் சேகரித்து அவ்வப்போது புதுப்பித்து அவற்றை பல்வேறு துறைகளும் விவசாயிகளின் நில உடைமை மற்றும் சாகுபடி செய்திருக்கும் பயிா் விவரம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் விவசாயிகளின் விவரங்கள், அவா்களுடைய நில உடமை விவரங்கள், மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு மற்றும் கிராம வரைபடங்களில் புவியியல் குறியீட்டினை இணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோல் நிகழாண்டில் என்னென்ன பயிா்கள் மேற்கொண்டுள்ளனா். அதை முழுமையாக மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீட்டினை முழுமையாக மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை நலத்துறை அலுவலா்கள் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments