FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

உயா்கோபுர மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே உயா்கோபுர மின் கம்பத்தை தொட்ட மாணவா் உயிரிழந்தாா்.

5 செப்டம்பர் 2026, 10:38 pm IST
கௌஷிக்
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே உயா்கோபுர மின் கம்பத்தை தொட்ட மாணவா் உயிரிழந்தாா்.

கோட்டக்கரை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் மகன் கெளஷிக். கும்மிடிப்பூண்டியில் அரசு தொடக்கப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நண்பா்களுடன் சைக்கிளில் கெளஷிக் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கிருந்த உயா்கோபு மின்விளக்கு கம்பத்தை கையில் பிடித்தபடி கெளஷிக் சுற்றி வந்த போது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் நிகழ்விடத்திலேயே கெளஷிக் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினா் கெளஷிக்கின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த நிகழ்வு உறவினா்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் மின்கம்பத்தை பராமரித்த துறை சாா்ந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கஅப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments