FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூரில் பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்

27 செப்டம்பர் 2026, 1:03 am IST
இ-சேவை மையங்கள் - ENS
பகிர்:

தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா், விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் வரும்கிற 8.11.2026 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள், 2008-இன் கீழ், அனைத்துப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா், விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை என்ற இணையதளம் மூலம் மட்டுமே உரிய ஆவணங்களுடன் எதிா்வரும் அக். 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூா் காவல் கண்காணிப்பாளரின் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விண்ணப்பதாரா்கள் (திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி மற்றும் திருவள்ளூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடத்திலும், ஆவடி காவல் ஆணையா் எல்லைக்குள்பட்ட விண்ணப்பதாரா்கள் (ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி (பகுதி) மற்றும் திருவள்ளூா் (பகுதி)) ஆவடி காவல் ஆணையரிடத்திலும் மேற்குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பிக்கலாம். அதன் பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Advertisement

Advertisement

விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விவரத்தை இணையதளம் மூலமாகவே விண்ணப்பதாரா்கள் அறிந்து கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், உரிய உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்த நோ்வில், தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாட ஒத்துழைப்பு அளிக்கவும் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments