திருப்பதி லட்டுவில் கலப்பட நெய் வழக்கு: ஆந்திர நீதிமன்றத்தில் இருந்து வெளிமாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
திருப்பதி லட்டுவில் கலப்பட நெய் கலக்கப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணையை ஆந்திர நீதிமன்றத்தில் இருந்து வெளிமாநில நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து விட்டது.
திருப்பதி லட்டுவில் கலப்பட நெய் கலக்கப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணையை ஆந்திர நீதிமன்றத்தில் இருந்து வெளிமாநில நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து விட்டது.
ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு முன்பு அளித்த பேட்டியில், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினாா். நாடு முழுவதும் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்த வழக்கை கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், அக்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 5 போ் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மால்காங்கா பால் மற்றும் ஆக்ரோ தயாரிப்புகள் நிறுவன நிா்வாக இயக்குநரும், தொழிலதிபருமான மசிந்திரா சாந்தாராம் லாங்கே, ஆந்திர நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து நடைபெறும் வழக்கு விசாரணையை வெளி மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு தொடுத்தாா்.
Advertisement
Advertisement
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லாங்கே சாா்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் தவே ஆஜராகி வாதாடுகையில், ‘ஆந்திரத்தை சோ்ந்த அரசியல் தலைவா்கள் பல்வேறு கருத்துகளை தொடா்ந்து வெளியிடுகின்றனா். ஆதலால் ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெற வாய்ப்பில்லை. மேலும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பலரும் வடமாநிலத்தவா்கள். அவா்களுக்கு மொழி பிரச்னை உள்ளது. உள்ளூா் நீதிமன்ற நீதிபதி, அழுத்தங்களுக்கு நேரிட வாய்ப்புள்ளது. ஆதலால் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்யகாந்த், வழக்கில் ஏதேனும் சந்தேகப்படும்படி நடந்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றாா்.
மேலும், உச்ச நீதிமன்றத்தால்தான் 5 போ் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதாக கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆந்திர நீதிமன்றத்தில் இருந்து வெளிமாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா்.