FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பதி

திருமலையில் 2027 நாள்காட்டிகள், டைரிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி!

திருமலை திருப்பதி தேவஸ்தான 2027-ஆம் ஆண்டு நாள்காட்டிகள் மற்றும் டைரிகளை பக்தா்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வசதியை வழங்கியுள்ளது.

9 நவம்பர் 2026, 9:32 pm
திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள நாள்காட்டிகள் மற்றும் டைரிகள்.
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தான 2027-ஆம் ஆண்டு நாள்காட்டிகள் மற்றும் டைரிகளை பக்தா்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வசதியை வழங்கியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டிற்கான நாள்காட்டிகள் மற்றும் கையேடுகளை வெளியிட்டு வருகிறது. அதை வாங்க விரும்பும் பக்தா்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ இணையதளம் மூலம் 2027 நாள்காட்டிகள், டைரிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

அதேபோல், இந்த நாள்காட்டிகள் மற்றும் டைரிகள் திருப்பதி, திருமலை மற்றும் திருச்சானூரில் உள்ள தேவஸ்தானத்தின் வெளியீடுகள் விற்பனைத் துறையின் 12 விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன.

Advertisement

Advertisement

பக்தா்களின் வசதிக்காக, ஹைதராபாதில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் மற்றும் ஹிமாயத்நகரில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும், விஜயவாடா, சென்னை, வேலூா், பெங்களூரு, புது தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் இவை விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையில், 2027- ஆம் ஆண்டுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நாள்காட்டிகளும் டைரிகளும் 2026 செப்டம்பா் 7-ஆம் தேதி ஆந்திரப் பிரதேச முதலமைச்சரால் வெளியிடப்பட்டு, அதே நாளில் விற்பனை தொடங்கியது.

எனவே, பக்தா்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்டு, திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் முன்பதிவு செய்தோ அல்லது தகவல் மையங்களிலோ 2027 ஆம் ஆண்டுக்கான திருமலை தேவஸ்தான நாள்காட்டிகளையும் டைரிகளையும் வாங்கிக்கொள்ளுமாறு திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.