FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கனிம வளங்களைப் பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கனிம வளங்களைப் பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கனிம வளங்களைப் பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தலித் பெண்கள் இயக்கம், கவுத்திமலை-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கம், தலித் பூ உற்பத்தியாளர்கள் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாராளுமன்றம், நவயுக வாலிபர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தலித் பெண்கள் இயக்கத்தின் தலைவி மு.இந்திராணி தலைமை வகித்தார். கவுத்திமலை-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கத் தலைவர் எஸ்.சேகர் வரவேற்றார்.

Advertisement

Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களைப் பாதுகாக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் பெண்களுக்கு வழங்க வேண்டும். மின்சாரக் கட்டணம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுற்றுச் சூழலைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தலித் பெண்கள் இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments