FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவண்ணாமலையில் நாளை தீபத் திருவிழா பந்தக்கால் நடும் விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, உலகப் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா, வரும் நவம்பர் 13 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயிலில் பூர்வாங்கப் பணிகளைத் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

தொடர்ந்து, காலை 6.05 முதல் 7.25 மணிக்குள் கன்னியா லக்னத்தில் கோயில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடும் விழா நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து, தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன், மணியக்காரர் நாகமணி, உபயதாரர்கள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments