பேருந்து மோதியதில் பள்ளி மாணவி சாவு
போளூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி இறந்தார்.
போளூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி இறந்தார்.
போளூர் ஒன்றியம், 99 புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ரமணி (49). இவர்களது மகள் சிந்துஜா (14). இவர் போளூரில் உள்ள தனியார் பள்ளியில்
10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சிந்துஜாவை ரமணி இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு திங்கள்கிழமை அழைத்துச் சென்றார். புதுப்பாளையம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, செங்கத்தில் இருந்து போளூர் நோக்கி வந்த தனியார் பேருந்து ரமணி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சிந்துஜா நிகழ்விடத்திலேயே இறந்தார். காயமடைந்த ரமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகனை (46) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.