ஆசிரியர்களுக்கு அறிவியல் கற்பித்தல் பயிற்சி
பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் கற்பித்தல் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் கற்பித்தல் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஸ்வரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பவானி பங்கேற்று 6,7,8-ஆம் பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு எளிய முறையில் அறிவியல் பாடம் கற்பித்தல், படைப்பாற்றல் கல்வி, அறிவியல் செயல்முறை பயிற்சி, அறிவியல் கண்காட்சி அமைப்பது குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கினார். இதில் 37 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.