சேயோன், தர்மன் திரைப்படங்களின் ஓடிடி உரிமையைப் பெற்ற நிறுவனம்!
சேயோன், தர்மன் ஓடிடி குறித்து...
சேயோன், தர்மன் திரைப்படங்களின் ஓடிடி உரிமையைப் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்க்கடவுள் முருகனை படிமமாக வைத்து இதன் கதை எழுதப்பட்டுள்ளதால் சேயோன் பெயரையும் வைத்துள்ளனர்.
அதே போல், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சேயோன் மற்றும் தர்மன் திரைப்படங்களின் ஓடிடி உரிமங்களையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்கமல் பிலிம்ஸ் திரைப்படங்களை நெட்பிளிக்ஸ் வாங்கிக்கொண்டிருந்த சூழலில் தற்போது ஹாட்ஸ்டார் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.
Reports suggest that a popular company has acquired the OTT rights to the films Cheon and dharman.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.