FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

184 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 184 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 184 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்தக் கல்லூரியில் 2015-16-ஆம் கல்வியாண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. முகாமுக்கு, கல்லூரிச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

பொருளாளர் எஸ்.டி.ஆர்.எஸ்.பாபு முன்னிலை வகித்தார். கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவரும், பணியமர்த்தும் பிரிவின் அலுவலருமான எம்.கோபு வரவேற்றார். கல்வி புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement

Advertisement

முகாமில், தனியார் நிறுவன அதிகாரிகள் சிவபிரகாஷ், சவுந்தரகுமார், சிரியா, முகமது ஆகியோர் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர்.

இறுதியில் 184 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரித் தாளாளர் எஸ்.கார்த்திகேயன் வழங்கினார். விழாவில், கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் பி.பாலாஜி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments