FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொடங்கியது ராம்சுரத்குமாரின் ஆராதனை விழா

திருவண்ணாமலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 15-ஆவது ஆண்டு ஆராதனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருவண்ணாமலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 15-ஆவது ஆண்டு ஆராதனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை - செங்கம் சாலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் உள்ளது.

இங்கு பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் ஆராதனை விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, 15-ஆவது ஆண்டு ஆராதனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 முதல் இரவு 7.45 மணி வரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று வெள்ளி ரத வீதியுலா: ஆராதனை விழாவின் 2-ஆவது நாளான சனிக்கிழமை காலை 6.30 முதல் 11 மணி வரை மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் மஹா அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.

தொடர்ந்து, காலை 9 முதல் பகல் 12 மணி வரை பூஜ்ய ஸ்ரீநித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில் தீர்த்த நாராயண பூஜை, காலை 11 முதல் மதியம் ஒரு மணி வரை பக்தர்களின் பஜனை

நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.

மாலை 4.30 முதல் 6 மணி வரை தேவார இன்னிசை நிகழ்ச்சி, மாலை 6.15 முதல் 7.45 மணி வரை நாட்டிய நிகழ்ச்சிகள், இரவு 8 மணிக்கு பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் வெள்ளி ரத வீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம் வழிகாட்டுதலின்படி, அறங்காவலர்கள் மா தேவகி, மதர் விஜயலட்சுமி, ஜி.சாமிநாதன், டாக்டர் டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் முன்னாள் மேலாளரும், ஆஸ்ரம தன்னார்வலருமான ஆர்.எஸ்.இந்திரஜித், ஆஸ்ரம ஊழியர்கள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments