FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பயிர் காப்பீடு செய்ய அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனக்காவூர் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளில் கடன்பெறாத விவசாயிகள் மட்டும் தேசிய வேளாண்மை காப்பீடு திட்டத்தின் கீழ் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

பயிர் இயற்கை சீற்றங்களான மழை, வெள்ளம், புயல், காற்று மற்றும் வறட்சி, நோய் தாக்குதல் போன்ற பல காரணங்களால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு பயிரை காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையலாம்.

ஒரு ஹெக்டேரில் பயிர் செய்த நிலத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.475 ஆகும். இதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். பயிர் சேதத்தில் இருந்து விவசாயிகள் மீள ஓர் அரிய வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments