காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: சாவில் சந்தேகம் என தந்தை புகார்
செய்யாறு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட 20 நாள்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட 20 நாள்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புதன்கிழமை புகார் அளித்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த விஷார் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கிடேசன். இவரது மகள் வினிதா (20). இவரும், செய்யாறை அடுத்த அரசங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கேட்டரிங், ஓட்டுநர் வேலை செய்து வரும் பிரபுவும் (30) காதலித்து வந்தனராம்.
இந்த நிலையில், வினிதாவை அவரது பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த 20 நாள்களுக்கு முன்பு பிரபு திருமணம் செய்து கொண்டாராம். மேலும், பக்கத்துக் கிராமமான தாளிக்காலில் தனியாக வீடு பிடித்து, இருவரும் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வினிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
இதனையறிந்த வினிதாவின் பெற்றோர் விரைந்து சென்று அவரை மீட்டு, செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வினிதா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, வினிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக வெங்கிடேசன் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.