FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளத்துக்கு ரூ.1.17 லட்சம் நோட்டு புத்தகங்கள்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்காக, திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ்., பள்ளிக் குழுமம் சார்பில் ரூ.1.17 லட்சம் மதிப்பிலான நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்காக, திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ்., பள்ளிக் குழுமம் சார்பில் ரூ.1.17 லட்சம் மதிப்பிலான நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் டி.அரவிந்த்குமார் தலைமை வகித்தார்.  பள்ளித் தலைவர் தர்மிசந்த் ஜெயின், செயலாளர் சுப்பராயன், பொருளாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ஆர்.கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான நோட்டு புத்தகங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்காக பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், பள்ளி இணைச் செயலாளர் எஸ்.பிரபாகரன், நிர்வாகிகள் பி.மழலைநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில்நாதன், பள்ளி முதல்வர் கே.வி.ஜெகதீஸ்வரி, தலைமை ஆசிரியை ஜெயசாந்தி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments