செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரூ.3.5 லட்சம் நிவாரணப் பொருள்கள்
செய்யாறில் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரள மாநிலத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
செய்யாறில் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரள மாநிலத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் செய்யாறு கல்வி மாவட்டம் சார்பில், 268 அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள்கள், எழுது பொருள்கள், ஆரணி கல்வி மாவட்டம் சார்பில், 100 அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள்கள் மற்றும் எழுது பொருள்கள்
என சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
செய்யாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்ட கல்வி அலுவலர்
பி.நடராஜன் நிவாரணப் பொருள்கள் அடங்கிய லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார். கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிப்புப் பணியில் இளம் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர் க.செல்வத்திருமால், பொருளாளர் டி.எம்.அருணா, இணைச் செயலாளர்கள் திருவாசகம், நாகராஜன், கௌதமன், கோவேந்தன், தரணிகுமார், சக்தி நாராயணன் மற்றும் ஜேஆர்ஜி மாணவர்கள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.