FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊதியக் குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும் 

ஓய்வூதியர்களுக்கு 8-ஆவது ஊதியக் குழுவின் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்தவாசி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ஓய்வூதியர்களுக்கு 8-ஆவது ஊதியக் குழுவின் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்தவாசி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. 
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியை ரூ.1000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும். 
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறும் வகையில் மாற்ற வேண்டும். வருமான வரி செலுத்துவதில் இருந்து ஓய்வூதியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். 
வந்தவாசியில் நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைத்துத் தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பொன்.ஜினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் எஸ்.காளத்தி, துணைத் தலைவர் வ.ராதாகிருஷ்ணன், இணைச் செயலர் இரா.பொன்னம்பலம், செய்தி தொடர்பாளர் மா.கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அமைப்புச் செயலாளர் வே.அரங்கநாதன் வரவேற்றார். செயலாளர் க.நடராசன் ஆண்டறிக்கையும், பொருளாளர் மா.கோவிந்தசாமி வரவு, செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர்.
ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.குமார், சங்க மாநில துணைத் தலைவர்கள் கே.நாராயணசாமி, டி.குணசேகரன், சங்க முன்னாள் தலைவர் பா.குபேந்திரன், வந்தவாசி சார்-நிலை கருவூல அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி, கூடுதல் அலுவலர் கி.ராஜா ஆகியோர்  சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நேமி.பாஸ்கரதாஸ், வ.அங்கையன், ஏ.வேங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments