FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குலைநோய்த் தாக்குதலால் நெல் பயிர்கள் பாதிப்பு

வந்தவாசி அருகே 20 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல்பயிர்கள் குலைநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வந்தவாசி அருகே 20 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல்பயிர்கள் குலைநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை. இவர் கடந்த புரட்டாசி மாதம் சுமார் 10 ஏக்கரில் வெள்ளை பொன்னி நெல் பயிரிட்டார். அறுவடைக்கு இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், கடந்த வாரம் நெல்பயிரை குலைநோய் தாக்கியுள்ளது. மேலும் அருகில் உள்ள மற்ற சில விவசாயிகளின் 10 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளை பொன்னி நெல்பயிரையும் குலைநோய் தாக்கியுள்ளது. 
சுமார் 70 சதவீத நெல்பயிர்கள் பாதிக்கப்பட்டுவிட்டது. இன்னும் சில தினங்களில் மீதம் உள்ள நெல்பயிரும் பாதிப்புக்குள்ளாகும். அதனால், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஓர் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால், குலைநோய்த் தாக்குதலால் எங்களுக்கு வைக்கோல் கூட மிஞ்சப் போவதில்லை. இந்த நஷ்டத்தை எப்படி தாங்குவது என்று தெரியவில்லை. எனவே, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments