FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

மது அருந்துவதாலும், போதைப் பொருள்களாலும் ஏற்படும்  தீமைகள் குறித்த விழிப்புணர்வுப்  பேரணி செங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மது அருந்துவதாலும், போதைப் பொருள்களாலும் ஏற்படும்  தீமைகள் குறித்த விழிப்புணர்வுப்  பேரணி செங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கலால்துறை, இளம் செஞ்சிலுவைச் சங்கம், தமிழ்நாடு காவல்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்தப்பேரணிக்கு சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். 
இளம் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் இந்திரராஜன்,  செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் (பொறுப்பு) சங்கரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலால்துறை அலுவலர் தண்டாயுதபாணி கலந்துகொண்டு பேரணியை தொடக்கிவைத்தார். பேரணியில் செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று, மதுஅருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம் வழியாக துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பழநி, துணை வட்டாட்சியர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments